நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் வைரஸ் தாக்கம் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் எட்டப்படும் தீர்மானம் குறித்து, 22 அல்லது 23ம் திகதிகளில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையின் கீழ், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்லது நாட்டை முடக்குவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கான ஆலோசனைகளை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதுவருடம் உள்ளிட்ட எந்தவொரு உற்சவத்தையும் இலங்கையர்களுக்கு கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.
அதேபோன்று, எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பிறப்பு பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் இந்த முறை மக்களுக்கு கிடையாது என இராணுவ தளபதி கூறினார்.
அனைவரும் ஒன்றாக இணைந்து, மகிழ்ச்சி கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கான சந்தர்;ப்பம் இது கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் பண்டிகை காலம் குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தை எதிர்வரும் 22 அல்லது 23ம் திகதிகளில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். (TrueCeylon)