பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா கெட்டரிங் நடவடிக்கை பிரிவில் கடமையாற்றும் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் கெட்டரிங் பிரிவில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒரு ஊழியருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவருடன் நெருங்கி பழகிய 7 பேருக்கு இன்றைய தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் கெட்டரிங் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
குறித்த கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கும், தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அச்சுறுத்தலாக மாறியுள்ள கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, தமது நிறுவனம் உரிய நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. (TrueCeylon)