நோர்வூட் – நிவ்வெளி பகுதியிலுள்ள லயின் வீட்டு குடியிருப்பு தொகுதியொன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றிரவு 7.30 அளவில் ஏற்பட்டுள்ளது.
நிவ்வெளி தொழிற்சாலை பிரிவு பெருந்தோட்டப் பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றிலேயே தீ பரவியுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட தீயினால் சுமார் 12 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்குள் செல்ல முடியாமையினால், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும், தீயினால் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.