பண்டிகை காலத்தில் நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு, பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ் அத்தியாவசியமானது என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
தாம் கொரோனா அபாய வலயத்தில் இருந்து வருகைத்தரவில்லை என்பதை, பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தும் சான்றிதழ் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சான்றிதழ் இல்லாத பட்சத்தில், மாவட்டத்திற்குள் சுற்றுலா பயணத்திற்காக அனுமதிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு, ஹோட்டல்களில் தங்க வேண்டும் என்றால், குறித்த சான்றிதழை ஹோட்டலுக்கு சமர்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)