நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300யை எட்டியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகாலை வரை 304 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 123 கொவிட் தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 33 தொற்றாளர்களும், பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 தொற்றாளர்களும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்திலுள்ள மேலும் 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)