இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இறுதியாக 13 உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்களை சுகாதார பிரிவினர் இன்று வெளியிட்டனர்.
உயிரிழந்தோரின் விபரங்கள்
01.நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 11ம் திகதி உயிரிழந்துள்ளார்.
02.அக்கரபத்தனை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்ணொருவர், நுவரெலியா வைத்தியசாலையில் கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.
03.பேலியகொட பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
04.பொம்புவல பகுதியைச் சேர்ந்த 83 ஆண்ணொருவர், கடந்த 5ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
05.களுத்துறை பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண்ணொருவர், தனது வீட்டிலேயே கடந்த 5ம் திகதி உயிரிழந்துள்ளார்.
06.நெபோட பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், கடந்த 10ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
07.மக்கோன பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண்ணொருவர், தனது வீட்டிலேயே கடந்த 05ம் திகதி உயிரிழந்துள்ளார்.
08.களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண்ணொருவர், கடந்த 7ம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
09.களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர், தனது வீட்டிலேயே கடந்த 5ம் திகதி உயிரிழந்துள்ளார்.
10.கம்பளை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், கம்பளை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்
11.பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்ணொருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
12.வெஉட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்ணொருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் கடந்த 3ம் திகதி உயிரிழந்துள்ளார்.
13.நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்ணொருவர், மினுவங்கொட வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post