நுவரெலியா − வலபனை பகுதியில் மீண்டும் நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலஅதிர்வு இன்று (31) அதிகாலை 3 மணியளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராச்சி பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவிக்கின்றார்.
இந்த நிலஅதிர்வு 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, கடந்த 22ம் திகதி வலபனை பகுதியில் 1.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post