ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அணுசரணையுடன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் (ISD) நடைமுறைப்படுத்தப்படும் சுத்தமான குடிநீர் வழங்கள், சுத்தம், சுகாதாரம், போசாக்கு மற்றும் சுற்றுச் சூழல் பராமரிப்பு தொடர்பான திட்டமானது தோட்டங்கள் மற்றும் கிராம பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு செயற்பாடாக நுவரெலியா பகுதியில் 17 தோட்டங்களில் 500 மரக்கன்றுகள் கடந்த 29ம் திகதி நாட்டப்பட்டது.
தோட்ட பிரதேசங்களின் நீர் ஊற்றுப் பிரதேசங்களை பாதுகாக்கும் பொருட்டு தோட்டப் பிரதேசங்களில் மர நடுகை செயற்பாடுகளை முன்னெடுப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.
இவ்வேலைத்திட்டம் கெளனிவெளி பிளாண்டேஷன் மற்றும் த ரைட் ட்ரெக் மன்றம் இவர்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (True Ceylon)