நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தை இன்று (15) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் காரியாலயத்தின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர், டொக்டர் ஷவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளவர்களுக்கு தொலைபேசி மூலம் விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தேசிய போக்குவரத்து மருத்து நிறுவனத்தின் காலி அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.
இந்த இரு அலுவலகங்களை தவிர, நாட்டின் ஏனைய மாவட்டங்களிலுள்ள அலுவலகங்கள் வழமை போன்று இயங்குவதாக நிறுவனத்தின் தலைவர், டொக்டர் ஷவேந்திர கமகே தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post