இலங்கை : ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மிக நீண்ட நாட்களுக்கு பின்னர், சர்வதேச நாடொன்றின் பிரதிநிதியொருவருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்தியா வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.
கொவிட் வைரஸ் பரவலினால், பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், இந்தியா, இலங்கையுடன் பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவினால் தயாரிக்கப்படவுள்ள கொவிட் தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், கொவிட் தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். (TrueCeylon)
Discussion about this post