கொவிட் தொற்று பரவல் காரணமாக நிதி அமைச்சின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 பணிப்பாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சின் இராஜாங்க நடவடிக்கைகளுக்கான திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சிலுள்ள ஏனைய தரப்பினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
நேற்று முன்தினம் எழுமாறாக ஐவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன், அவர்களில் நால்வருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சின் வளாகத்தை முழுமையாக மூடுவதற்கு இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அதிகாரியொருவர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post