நானுஓயா ரதெல்ல பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிபில பகுதியிலிருந்து தலவாகலை பகுதியில் மரண வீடொன்றிற்கு சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர் திசையில் பயணித்த லொறியொன்றுடன் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post