உலகம் முழுவதும் கொவிட் தொற்று மிக வேகமாக பரவிவரும் பின்னணியில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொவிட் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிராமிய பாடலொன்றின் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்த இரத்தினபுரி – மடபத்திர பகுதியைச் சேர்ந்த ஏ.ஆதிமூலம் தீர்மானித்துள்ளார்.
இதன்படி, தானே எழுதிய விழிப்புணர்வு பாடலை ட்ரூ சிலோன் இணையத்தளத்திற்கு அவர் பாடி காட்டியிருந்தமை பெரும்பாலானோரின் வரவேற்றை பெற்றுள்ளது.
சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் இந்த விழிப்புணர்வு நாட்டுப்புற பாடல் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.