நாட்டின் 11 மாவட்டங்களிலுள்ள பல பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
நாட்டிலுள்ள 11 மாவட்டங்களின் 77 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, அம்பாறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பகுதிகலே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 17 பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் 16 பகுதிகளும் களுத்துறை மாவட்டத்தில் 12 பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் 4 பகுதிகளும், அம்பாறை மாவட்டத்தில் 9 பகுதிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில் 9 பகுதிகள் முடக்கப்பட்டுள்ள அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் 2 பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் தலா ஒவ்வொரு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. (TrueCeylon)