நாடு முழுவதும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 36 குழுக்கள் செயற்பட்டு வருவதாக பொலிஸார், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இந்த குழுக்களில் 24 குழுக்கள் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் எட்மிரல் சரத் வீரசேகரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு செயற்படும் குழுக்களின் முக்கிய நபர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல், மோட்டார் சைக்கிள் மற்றும் தங்காபரண கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலுள்ள பொதுமக்கள், எந்தவித அச்சமும், சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குமாறு பொலிஸாருக்கு, அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். (TrueCeylon)