நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாடு முடக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவ்வாறு போலி செய்திகளை பரப்புவோர் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாடு முழுமையாக முடக்கப்படும் எனவும், அந்த காலப் பகுதியில் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று உணவு விநியோகம், விநியோக சேவைகள், பேக்கரி உற்பத்திகள் இடம்பெறாது எனவும், அந்த காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க இடமளிக்கப்படாது எனவும் போலி செய்திகள் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானது எனவும், அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எட்டவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.