2019.04.21 அன்று இலங்கையில் நடந்த தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இறுதி அறிக்கை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றமும் நாடும் எதிர்பார்த்திருந்த இந்த அறிக்கை சபாநாயகர் மற்றும் சபை மூலம் வெளியிடப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.
இந்த அறிக்கை குற்றவாளிகளை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளது என்றும் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களைக் குறிப்பிடவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும் ஈஸ்டர் கமிஷனின் அறிக்கை குறித்து மூன்று நாள் விவாதம் தேவை என்றும் அவர் கோரினார்.
எனினும் இது தொடர்பாக புதிய விவாதத்தை கோர வேண்டிய அவசியமில்லை என்றும் முன்கூட்டியே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Discussion about this post