பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றால், பெருந்தோட்டப் பகுதிகளில் முள் தேங்காய் செய்கைக்கு அனுமதி வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள், தொழில் அமைச்சரிடன் கோரியுள்ளனர்.
எனினும், பெருந்தோட்ட நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சட்டவிரோதமானது என்பதனை கருத்திற் கொண்டு, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதற்கு எதிர்ப்பை தெரிவித்ததாக தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
முன் தேய்காய் செய்கையானது, தற்போது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள செய்கையாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் அண்மையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.
தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில், தொழிற்சங்கங்கள் இல்லாத சந்தர்ப்பத்தை மையப்படுத்தி, பெருந்தோட்ட நிறுவனங்கள், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)
Discussion about this post