இலங்கையின் தொலைத்தொடர்பு வலையமைப்புக்களில் எண் பெயர்வுத்திறனை (Number Portability) நடைமுறைப்படுத்த கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு எட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான தகவல்களை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.trc.gov.lk ல் பார்வையிட முடியும்.
இது தொடர்பிலான பொதுமக்கள் கருத்துக்களை பெப்ரவரி மாதம் 12ம் திகதிக்கு முன்னர் கோரப்படுகின்றது.
தமது கருத்துக்களை தபால் மூலமாகவோ அல்லது nw@trc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்க முடியும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (TrueCeylon)

Discussion about this post