தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வகையிலான தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தை ஸ்தாபிக்கும் வகையிலான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சட்ட மாஅதிபரின் அனுமதியுடன் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி அமைச்சரவையிடம் அனுமதி கோரியுள்ளார். (TrueCeylon)