தமிழகத்தின் தூத்துக்குடி கடல் பகுதியில் சட்டவிரோதமாக நடமாடிய 7 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிய ரக படகொன்றின் ஊடாக குறித்த இலங்கையர்கள், தமிழகத்திற்குள் பிரவேசித்துள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களிடமிருந்து பல கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐந்து கைத்துப்பாக்கிகளும் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழக கரையோர பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.