திருகோணமலை – கந்தளாய் பகுதியில் மனைவியை, கணவன் கூரிய ஆயுதத்தினால் குத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தனது மனைவியை, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த கணவன் வழி மறித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர், திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து, தனது மனைவி சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதன்போது, அந்த இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸ் உத்தியோகத்தர், மீண்டும் திரும்பி சென்றுள்ளதை காண முடிகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த பெண், திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Liveat8)
Discussion about this post