திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலினால், கடல் வளங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயவுள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
அதிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப் இதனைக் குறிப்பிடுகின்றார்.
திருகோணமலை கடற்பரப்பில் கடந்த 23ம் திகதி சீமெந்து ஏற்றி வந்த கப்பலொன்று தரை தட்டியது.
இதையடுத்து, கப்பலை மீட்கும் நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கப்பல் விபத்துக்குள்ளாகும் போது, கப்பலில் 33,000 டொன் சீமெந்து மற்றும் 762 டொன் எரிப்பொருள் இருந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவிக்கின்றார்.
விபத்தினால் கப்பலிலிருந்து எந்தவொரு கசிவும் ஏற்படவில்லை என அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post