களுத்துறை கடற்பரப்பில் திடீரென டெல்பின்கள் கரையொதுங்கியுள்ளன.
நேற்று மாலை முதல் டெல்பின்கள் கரையொதுங்கியுள்ளன.
மீனவர்கள், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடகள் டெல்பின்கள் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒரு டெல்பின் மாத்திரம் மீண்டும் கரையொதுங்கிய நிலையில், அதனை காற்றடைத்த படகின் மூலம் கடற்படையினர் கடலுக்குள் விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த கடற்கரையில் இறந்த நிலையில் டெல்பின் ஒன்று, இன்றைய தினம் கரையொதுங்கியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, குறித்த கடற் பிராந்தியத்தின் பாணந்துரை கடற்பரப்பில் அண்மையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கியிருந்ததுடன், அவற்றில் 3 திமிங்கலங்கள் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு குறித்த கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீன்கள் கரையொதுங்குகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக கடல்சார் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.