இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சௌரவ் கங்குலி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிய நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்தே, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார்டியாக் அரஸ்ட் எனப்படும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post