கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமாக பல இணையத்தளங்கள் இன்று மாலை திடீரென முடங்கியிருந்தன.
குறித்த இணையத்தளங்கள் ஏன் செயலிழந்தன என்பது தொடர்பிலான தகவல்களை வெகுவிரைவில் வெளியிடவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.
உலகம் முழுவதும் உள்ள கூகுள் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், செயலிழந்திருந்த அனைத்து இணையத்தளங்களும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*******
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பல இணையத்தளங்கள் இன்று மாலை முதல் திடீரென முடங்கியுள்ளன.
ஜிமெயில், யூடியூப் உள்ளிட்ட பல சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேவ ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல வீடியோ தளமான யூடியூப் தளம் செயலிழந்துள்ளது.
இலங்கையின் பல பாகங்களில் யூடியூப் செயலிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.
யூடியூப் செயலிழந்துள்ளமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை (TrueCeylon)