நாடு பூராகவும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பஸ் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் போக்குவரத்துக்கள் உரிய முறையில் இடம்பெறாததை அடுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவிக்கின்றார்.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, இன்று மற்றும் நாளை ரயில் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.