தளபதி 64 படத்திற்காக ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் முதலாவது திரைப்படமாக இது அமைந்துள்ளது.
பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கு வில்லனாகவும், விக்ரம் வேதா திரைப்படத்தில் மாதவனுக்கு வில்லனாகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி, இன்று தளபதி விஜயுடன் கைக்கோர்க்கின்றார்.