இலங்கை : கொரோனா தொற்றுக்குள்ளாகி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த 5ஆம் திகதி முதல் இதுவரை பாராளுமன்றத்திற்கு செல்லவில்லை என பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
சிங்கள இணையத்தளமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான முதலாவாது பாராளுமன்ற அமர்வு கடந்த 5ம் திகதி ஆரம்பமானது.
தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர தனக்கு அறிவித்ததன் பின்னர், பாராளுமன்றத்திலுள்ள சி.சி.டி.வி கமராக்களை ஆராய்ந்ததில் அவர் பாராளுமன்றத்திற்கு கடந்த சில தினங்களில் வருகைத் தரவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்தி செல்வதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தயாசிறி ஜயசேகர, சிகிச்சைகளுக்காக ஹிக்கடுவையிலுள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post