இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியொன்றின் இரண்டு ஒலிபரப்பாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், வானொலியின் பணியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வானொலியின் இரண்டு ஆண் ஒலிபரப்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இருவருக்கும் கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாக சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.
இதையடுத்து, வானொலியின் பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு வானொலியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பணியாளர்களுக்கு கட்டம் கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.