யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கொரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது தமிழ் கொடி என்ற அமைப்பு உதவிகளை வழங்கி வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி தனது பேஸ்புக் தளத்தில் ஊடகவியலாளர் எஸ்.முகுந்தன் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த பதவியை நீக்குமாறு கோரி தமிழ்க்கொடி அமைப்பினர் தொடர்ந்தும் ஊடகவியலாளர் முகுந்தனுக்கு அழுத்தங்களை விடுத்துள்ளனர்.
எனினும், பதிவை நீக்க மறுத்ததை அடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத சிலர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியது மாத்திரமன்றி, அவரது தொலைபேசியையும் குறித்த சந்தேகநபர்கள் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் முகுந்தன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து, இன்றைய தினம் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
#Alram!
There is a possibility of covid -19 virus spreading via humanitarian aid works. I don’t see any action by the…Posted by Mugundan Suntharalingam on Monday, November 9, 2020