தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம், மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியிலுள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அலி சப்ரியிடம் இந்த மகஜரை கையளித்துள்ளனர்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்துமாறு மகஜரின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், காதர் மஸ்தான் ஆகியோர், நீதி அமைச்சரிடம் மகஜரை கையளித்துள்ளனர்.
அரசாங்கத்திலுள்ள சிறுபான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன், சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யும் பட்சத்தில், சட்ட மாஅதிபர் உள்ளிட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாட முடியும் என நீதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில், கொள்கை ரீதியில் தீர்மானமொன்று எட்டப்படும் பட்சத்தில், துரித நடவடிக்கைளை எடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். (TrueCeylon)