இலங்கை : பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் சார்பில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் (TrueCeylon)
Discussion about this post