Thursday, August 18, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

தமிழில் பாடி மக்களை இன்பமடையச் செய்யும் இலங்கை பொலிஸார் (VIDEO)

April 4, 2020
in இலங்கை
Reading Time: 1 min read
3
SHARES
235
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக, மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

எனினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக சுகாதார அமைச்சின் இறுதித் தரவுகளின் பிரகாரம், ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 159 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொரோனா தொற்றினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண திட்டங்களை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் மாத்திரமன்றி தனியார் துறைகளும் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகும் பகுதிகளை முழுமையாக முடக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, கம்பஹா, யாழ்ப்பாணம், சிலாபம், புத்தளம், களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்திருந்தார்.

இவர் தனது வீட்டில் இருந்த நிலையில் சுகயீனமுற்றிருந்ததுடன், அவர் அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இது இலங்கையில் பதிவான நான்காவது மரணமாகும்.

அத்துடன், குறித்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் இந்த தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார தரப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்த மரணத்தை அடுத்து, குறித்த நபர் வாழ்ந்த மருதானை தொடர்மாடி குடியிருப்பொன்று அமைந்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டது.

தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும், அந்த பகுதியிலுள்ள மக்கள் சுய கண்காணிப்புக்கு உட்படுத்தும் வகையிலுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள சுமார் 700ற்கும் அதிகமானோர் தமது வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.

அந்த பகுதியிலுள்ள மக்கள் வீட்டு முற்றத்திற்கு வருவதற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்துள்ளனர்.

பாதுகாப்பு பிரிவினரின் இசை நிகழ்ச்சி

இதையடுத்து, அந்த பகுதியிலுள்ள மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதை உணர்ந்த பாதுகாப்பு பிரிவினர், அவர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தொடர்மாடி குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக பாதுகாப்பு பிரிவின் வாகனத்தை நிறுத்தி, அதில் இசை நிகழ்ச்சியை பாதுகாப்பு பிரிவினர் நடத்திய சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

இந்த சம்பவம் குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெருவில் நின்று கொண்டு ஒரு குழுவினர் பாடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. ‘ஊரு சனம் தூங்கிருச்சு…’ எனத்தொடங்கும் தமிழ் திரைப்படப் பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த பகுதியிலுள்ள மக்களில் மனங்களில் எழுந்துள்ள அச்சத்தை போக்கும் வகையிலும் இந்த இசை நிகழ்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மனதளவில் பாதிக்காதிருக்கும் நோக்குடன் இவ்வாறு புதிய முயற்சிகளை இலங்கை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Despite been overburdened during these trying times the #lka police band performed for a street that’s under lockdown due to the #COVID19 pandemic. The tireless hours and personal sacrifices you make everyday for this nation and our people is much appreciated. #TogetherWeCan pic.twitter.com/QSECgCeggm

— Mahinda Rajapaksa (@PresRajapaksa) April 4, 2020

 

-BBC TAMIL-

Previous Post

நாடு முடக்கப்படுமா? – அஜித் ரோஹண விசேட கருத்து

Next Post

பாலித்த தெவரபெருமவின் படம் இவ்வாறு பகிரப்பட காரணம் என்ன? (PHOTO)

Next Post

பாலித்த தெவரபெருமவின் படம் இவ்வாறு பகிரப்பட காரணம் என்ன? (PHOTO)

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022

Recent News

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
671
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
572
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
405
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022
322
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved