கடந்த மூன்று தினங்களாக 7 மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே எந்தவொரு தொற்றாளர்களும் கடந்த 3 தினங்களில் அடையாளம் காணப்படவில்லை என திணைக்களம் குறிப்பிடுகின்றது.
மட்டக்களப்பு, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நேற்றைய தினம் தலா ஒவ்வொரு தொற்றாளர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஆகக்கூடுதலான தொற்றாளர்கள் கம்ஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் 77 பேர் நீர்கொழும்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன், பல்லன்ஹேன சிறைச்சாலையில் 71 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 96 தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 47 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post