கொவிட் தொற்று காரணமாக தமிழகத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
இதன்படி, தமிழகத்திலிருந்து நாட்டிற்கு வருகைத் தர விரும்புவோர், தமது தகவல்களை பெற்றுத் தருமாறும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
தமிழகத்தில் சுமார் 1500 இலங்கையர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளமை தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
நாட்டிற்கு வருகைத் தர விரும்புவோர், தமக்கு அறிவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அறிவிப்பதற்கு சில தொலைபேசி இலக்கங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார்.
+94760225167
+94769122831
+919003067621