கண்டி − கலஹா குருப் பகுதியில் இருக்கும் சுமார் 3000 மக்களின் கடிதங்கள் தத்தமது வீடுகளுக்கு கிடைக்காமல் கலஹா காரியாலத்தில் தேங்கி நிக்கும் நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
குறிப்பாக தோட்டத்திற்கு பொறுப்பான ஒருவரின் ஊடாக கடிதங்கள் எடுத்துச்சென்றாலும் அது உரிய முறையில் மக்களிடம் சென்றடையாமல் மீண்டும் திருப்பி அனுப்பும் நிலைக்கு உள்ளாக்கபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கலஹா மேற்பிரிவு, கிதுல்முல்ல, அப்பர் டொனாலி, மாசிமலை, மல்பெரி, எட்ரி டிவிசன். ஆகிய பகுதிகளுக்கான கடிதங்களே சரியான முறையில் விநியோகிக்க அப்பகுதிக்கு எமது மலையக இளைஞர்களுக்கு வேலைவாய்பினை ஏற்படுத்திக்கொடுக்க எமது அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.
முக்கியமாக இப்பகுதியில் இருக்கும் பாடசாலைகளுக்கு வரும் கடிதங்களை அப்பாடசாலை சார்ந்த ஒருவரினால் கலஹா தபால் நிலையத்திற்க்கு சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிப்பதோடு, விரைவில் இப்பகுதிக்கான தாபல்காரர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இது தொடர்பில் ஊடகங்கள் கவனம் செலுத்தி இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவர உதவ வேண்டுமென தெரிவிக்கின்றார்கள். (TrueCeylon)
Discussion about this post