இனம், மொழி, சமயம் என வேறுபடாது வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.
கட்டுவாபிட்டிய புதிய செபஸ்டியன் தேவாலயத்தின் வருடாந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தவறிழைக்கும் பட்சத்தில், அதனை தவறு என சுட்டிக்காட்டுவதற்கான தைரியம் ஒவ்வொருவருக்கும் தேவை என அவர் கூறுகின்றார்.
நாட்டிலுள்ள பொது சொத்துக்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இனம் மற்றும் நாடு என்ற விதத்தில், ஒவ்வொருவருடைய மனசாட்சி படிப்படியாக இல்லாது போவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சத்தமிடுவதன் ஊடாக உண்மையை பொய்யாக்க முடியாது என பேராயர் கூறுகின்றார்.
உண்மை… உண்மை எனவும், பொய்… பொய் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், சம்பவம் இடம்பெற்ற தருணம் முதல் தான் குரல் எழுப்பியதாகவும், அது தனது பொறுப்பு எனவும் அவர் கூறுகின்றார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்தில் மரணத்திற்கு அச்சம் கொள்வதில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
தான் கதைக்க வேண்டும் எனவும், எந்தவொரு சக்தியாலும் தன்னை மௌனிக்க வைக்க முடியாது எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post