இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது ஒரு நாள் சதத்தை இன்று பூர்த்தி செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலேயே அவர் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
கராச்சியில் நடைபெறும் மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க மற்றும் பெர்ணான்டோ ஜோடிகளில், பெர்ணான்டோ 4 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார்.
எனினும், தனுஷ்க குணதிலக்க இலங்கை அணியை மிக சிறந்த நிலைக்கு முன்னோக்கி கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.