வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரை தனிமைப்படுத்துவதற்காக ஹோட்டல்களுக்கு அனுப்பும் போது சட்டவிரோதமாக நிதி பெறும் 3ம் தரப்பினருக்கு அதற்காக எவ்வித சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க கூடாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலுடன் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 வைரஸின் இரண்டாம் அலை பரவலின் பின்னர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மிகவும் உயர் தரத்தில் மற்றும் நம்பகத்தன்மையுடனும் பராமரித்துச் செல்ல இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதால் அது தொடர்பில் இராணுவத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ள விம்பத்திற்கு சேதம் விளைவிக்க எவருக்கும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என இராணுவத்தளபதி மேலும் குறிிப்பிட்டார்.
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராணுவத்தளபதி இதனை தெரிவித்தார்.
Discussion about this post