தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட திட்டமொன்று விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முதல் முன்னெடுத்து வருகின்றனர்.
ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன் கமராக்களில் கண்காணித்து, சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
முகத்துவாரம் பகுதியில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை, இன்றைய தினம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, மேல் மாகாண எல்லையை விட்டு வெளியேறுவதற்கு 15ஆம் திகதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.