தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறையை மீறியதால் 51 பயணிகளுடன் கொழும்பிலிருந்து கதிர்காகம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றை பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பொரல்ல காவல்துறையினரால் வழங்கப்பட்ட தகவலின்படி பேரூந்து மத்தளையில் உள்ள தென் அதிவேகப்பாதையின் வெளியிணைப்பு இடத்தில் வைத்து தடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் வண்ணாத்துமுல்ல கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும்
தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வசிக்கும் ஒருவரும் குறித்த பேரூந்தில்
பயணித்தமை கண்டறியப்பட்டது.
பேரூந்து பொரல்ல காவல்துறைக்கு கொண்டுவரப்பட்டதுடன் , அதில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்தப்படுவுள்ளதுடன், இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
பேரூந்தின் உரிமையாளர், ஓட்டுநனர், நடத்துனர் ஆகியோருக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.(Trueceylon)