தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் தீர்மானமொன்று எட்டப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
தனிமைப்படுத்தலை தளர்த்துவது தொடர்பில் நாளைய நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கொழும்பு வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட் தொற்று அதிகளவில் பரவுகின்ற அபாயத்தை கொண்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, விமானப்படையுடன் இணைந்து நேற்று முதல் பொலிஸார் விசேட திட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
ஹொலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி, தனிமைப்படுத்தல் பகுதிகளில் நடமாடுவோரை கைது செய்ய பொலிஸார் நேற்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.