இரண்டாம் இணைப்பு
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படைக்கு சொந்தமான ட்ரோன் கமரா மற்றும் ஹொலிகொப்டர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதலாவது இணைப்பு
தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
தனிமைப்படுத்தலில் இருந்து, குறித்த பகுதிகள் விடுவிக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
ட்ரோன் கமராக்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு விசேட பொலிஸ் குழுவை ஈடுபடுத்தி, சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.