லண்டனில், நடராஜா நித்தியகுமார் (41) அவரது 18 மாத மகள் பாவின்யா மற்றும் அவரது மூன்று வயது மகன் நிஜிஷ் ஆகியோரைக் கொன்றுள்ளார்.நிஷாந்தினி (35) என்ற அந்த தாய் குளித்துவிட்டு திரும்பும்போது,கட்டிலில் இரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள், அவரது குழந்தைகளான நிகிஷ்மற்றும் பாவின்யா இருவரும். துடிதுடித்துப்போன நிஷாந்தினி, கணவர் நித்தியகுமார் கையிலிருந்த கத்தியை பறித்துவிட்டு குழந்தைகளை கவனித்தபோது, பாவின்யா ஏற்கனவே உயிரிழந்திருந்தாள்.
நிகிஷ் லண்டன் ரோயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையின் பின் 2 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார் .நித்தியகுமார் தன்னை தானே கழுத்திலும் நெஞ்சுலும் கத்தியால் குத்தி கொண்டுள்ளார் . தீவிர சிகிச்சையின் பின் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நிஷாந்தனியின் கல் மனதையும் கரையச் செய்யத்தக்க அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.ஒரு குறையும் இல்லாத, எப்போதும் உதவ தயாராக இருக்கும் என் மகன் நிகிஷ் என்றும், விளையாட்டுப்பிள்ளை என் மகள் பவின்யா என்றும் பிள்ளைகளை வர்ணித்துள்ள நிஷாந்தினி, வாழ்வே வெறுமையாகிவிட்டது போல் இருக்கிறது, இனி வாழ்வதில்அர்த்தம் என்ன என்றும் தோன்றுகிறது, எனக்கு முன் என் பிள்ளைகள் இறக்கும் ஒருசூழலை நான் கற்பனை கூட செய்துபார்த்ததில்லை என்கிறார்.எந்த தொந்தரவும் செய்யாத என் மகன் நிகிஷ் விட்டுச் சென்ற பொம்மைகள், எனக்குஅவனது நினைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.
பவின்யா உண்மையில் ஒரு இரட்டைக் குழந்தை, அவளுடன் உருவான மற்றொரு குழந்தைஇறந்துவிட, அவள் மட்டும் அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தாள் என்று கூறும்நிஷாந்தினி, என் குழந்தைகளுக்காகவே வாழ்ந்தேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்கள் வயதுக்கு அவர்கள் மிகவும்புத்திசாலிகளாக இருந்தார்கள், அது என்னை மகிழவும் பெருமிதம் கொள்ளவும் செய்கிறது என்கிறார்.
மனைவி , கணவனை பற்றி சாட்சியளிக்கும் போது , அவர் அமைதியான நல்ல கணவனாகவும் என் பிள்ளைகளுக்கு பாசமான தந்தையாகவும் இருந்தார் . வீட்டுவேலைகள் செய்வதுக்கு உதவியாக இருந்தார். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என என் கனவிலும் நான் நினைக்கவில்லை.
மன நல பாதிப்பு காரணமாக குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற நித்தியகுமாரை சிறைக்கு அனுப்புவது சரியாக இருக்காது என்று கூறியுள்ள நீதிமன்றம், அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.அத்துடன் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நித்தியகுமாரால் மற்றவர்களுக்கும்ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் நீதிபதி.அவர் காலவரையின்றி சிகிச்சைக்காக ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கருதும் வரை விடுவிக்கப்படமாட்டார்.