தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிக்கு தான் மன்னிப்பு வழங்கியுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் ராகுல் காந்தியின் தந்தையும், இந்திய முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி உயிரிழந்திருந்தார்.
”எனது தந்தை உயிரிழந்த போது, சொல்ல முடியாதளவு சோதம் இருந்தது. எனினும், தற்போது எனக்கு கோபம் கிடையாது. யார் மீதும் கோபம் கிடையாது. நான் எனது தந்தையை இழந்தேன். அது மிகவும் சிரமமான காலம். யாரேனும் உங்களின் இதயத்தை வெட்டி எடுத்ததை போன்றதொரு சோகம் காணப்பட்டது. கூறிக் கொள்ள முடியாதளவு சோகம் இருந்தது. யார் யார் மீதும் வைராக்கியம் வைக்க மாட்டேன். நான் மன்னிப்பு வழங்குகின்றேன்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். (The Hindu)
Discussion about this post