வடக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று மாவீரர் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் தமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நினைவேந்தலை நடத்தியிருந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல இராணுவம் முழுமையாக தடை விதித்திருந்த பின்னணியில், தமது வீடுகளில் விளக்கேற்றி, யுத்தத்தில் உயிரிழந்த மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூர்ந்தனர்.