நியூயோர்க் நகரில் கொரோனா வைரஸின் புதிய வடிவம் வேகமாகப் பரவி வருவதாகவும், இது கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை பலவீனப்படுத்தக்கூடிய ஒரு மோசமான விகாரத்தை கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
B.1.526 என அழைக்கப்படும் புதிய மாறுபாடு, நவம்பர் மாதம் நியூயோர்க் நகரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
கலிஃபோர்னியாவில் விரைவாக பரவும் புதிய வைரஸை விட நியூயோர்க்கில் உள்ள வைரஸ் மாறுபாட்டைப் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்ட டாக்டர் நுசென்ஸ்வீக் கவலைப்பட்டார்.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மாறுபாடு, இப்போது 45 மாநிலங்களில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்றியுள்ளது.
மேலும் கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் அல்லது தடுப்பூசி போடப்பட்டவர்கள் இந்த மாறுபாட்டை எதிர்த்துப் போராட வாய்ப்புள்ளது, அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று நம்பிக்கை கொள்ள முடியாது.
அவர்களும் இதில் கொஞ்சம் நோய்வாய்ப்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வைரஸ் தொடர்ந்து உருவாகி வருவதால், தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பென் மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம நுண்ணுயிரியலாளர் டாக்டர் ஆண்ட்ரூ ரீட் கூறினார்.
Discussion about this post