நாட்டிலுள்ள யானைகளை கணக்கெடுக்கும் நடவடிக்கையொன்றை அந்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருகின்றது.
ஆசிய நாடுகளிலுள்ள யானைகளை கணக்கெடுக்கும் நடவடிக்கை சிரமமானது எனவும், இலங்கையின் வனப் பகுதிகளை அண்மித்து சுமார் 7000 யானைகள் உள்ளதாகவும் வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவிக்கின்றார்.
இலங்கையில் இறுதியாக 2011ஆம் ஆண்டே காட்டு யானைகள் தொடர்பிலான கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு யானைகளை கணக்கெடுக்க திட்டமிடப்பட்ட போதிலும், தொடர் காலநிலை மாற்றத்தினால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, 2020ம் ஆண்டு யானை மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதல்களின் போது, எத்தனை யானைகள் இறந்துள்ளன என்பது தொடர்பில் கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post