அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை, அமெரிக்கா பாராளுமன்ற சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற கட்டடமான கெப்பிட்டல் கட்டடத் தொகுதிக்குள், வன்முறையை தூண்டும் வகையில் ஆதரவாளர்களை தூண்டிய குற்றச்சாட்டில் இந்த குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
இந்த குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக டிரம்பின் குடியரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 10 உறுப்பினர்கள், குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இந்த குற்றவியல் பிரேரணை மீதான விவாதத்தின் போது, குறித்த கட்டடத் தொகுதிக்கு விசேட பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டாவது குற்றவியல் பிரேரணை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 3 ஜனாதிபதிகளுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Discussion about this post